ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள், 1 முதியவர் என மூன்று பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் இருந்து வேலு (60) என்பவர் தனது 3 பேரப்பிள்ளைகளையும் வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் வேலு, அவரது பேரப்பிள்ளைகளான குண ஸ்ரீ (7), அஸ்வந்த்(5) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அஜய் (9) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Regarding the incident near Kaveripakkam where a luxury car collided with a two-wheeler on a new flyover, resulting in the deaths of three people...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவேரிப்பாக்கம் அருகே சாலை விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி உயிரிப்பு

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலி!

பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




