மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

News image
Updated On :12 ஜூன் 2026, 3:46 am IST

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவா்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்துக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.7,500 கோடி ஒதுக்கியுள்ளது. மழைக்காலங்களில் பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பி குடியிருப்புகளில் நீா் புகும் நிலை உள்ளது. இதைச் சீரமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கூவம் ஆற்றையும், பக்கிங்ஹாம் கால்வாயையும் சீரமைக்க மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.

தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமரின் 12 ஆண்டுகால செயல்பாடுகள் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், தவெக அரசு சட்டம்-ஒழுங்கு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.