கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் நாளை செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள முதல்வர் விஜய், நாளை (ஜூன் 12) தமிழகம் திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, நாளை கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் வந்தடையும் விஜய், சாலை வழியாக பிற்பகல் 3 மணியளவில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த பயணத்தின்போது முதல்வர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக காவல்துறையிடம் தமிழக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக தில்லிக்கு புதன்கிழமை (ஜூன் 10) சென்றுள்ளார். மேலும், மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்திலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
TN CM Joseph Vijay to visit Kollur Mookambika temple on June 12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







