ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை என ஜான் பிரிட்டோ விளக்கம்

News image

போதைப் பொருள் - பிரதி படம் - ANI

Updated On :9 ஜூன் 2026, 1:37 pm IST

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, அது நான் இல்லை என்று அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

என் மீது ஆதாரமின்றி பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தார் ஜான் பிரிட்டோ.

அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கூறினார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ வேறு. நான் வேறு.

இது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருப்பது குறித்து தற்போதுதான் எனது கவனத்துக்கு வந்துள்ளது. உடனடியாக வழக்குரைஞருடன் பேசி நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்க வந்துள்ளேன். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ யார் என்பது எனக்குத் தெரியாது, அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என் மீது லாட்டரி மோசடி வழக்குதான் கேரள மாநிலத்தில் பதிவாகியிருக்கிறது. அந்த வழக்குப் பதிவு காகிதத்தைத்தான் காட்டி, என் மீது வழக்கு இருக்கிறது என்று போதைக் கடத்தல் வழக்குப் பற்றி கூறுகிறார்கள்.

உள் நோக்கத்துடன் பொய்த் தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

John Brito clarifies that he has no connection to drug trafficking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.