17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவது பற்றி...

News image

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - PTI

Updated On :5 ஜூன் 2026, 1:22 pm IST

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில். இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 பேர் இதில் இடம்பெற்றுள்னா்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடைபெற்றுள்ளது. லஞ்சம், போதைப்பொருள் புழக்கம் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருந்தார்.

இந்தாண்டு தொடக்கத்தில் திமுகவின் ஆட்சியில் 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தவெக அரசில் நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

அந்த வகையில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற ஜூன் 18 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு. சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

Story image

Summary

TN assembly session starts from june 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.