காங்கிரஸ் கட்சி எப்போதும் சந்தர்ப்பவாத கட்சியாகவே இருந்து வருவதாக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னையில் செய்தியாளருடன் பாஜக செயலாளர் வினோஜ் செல்வம் பேசியதாவது, "இந்திய அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி, எப்போதுமே ஒரு துரோக கட்சியாகவே இருந்து வருகிறது. துரோகத்தையும் காங்கிரஸையும் பிரிக்க முடியாது.
கடந்த காலத்தில் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தில் திமுகவுக்கும் பங்குண்டு. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த இரு கட்சிகளுமே நேரில் கண்டன.
அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஆளும் கூட்டணியில் சாதகமான ஓரிடத்தைப் பெறுவதிலும் சந்தர்ப்பவாத கட்சியாகவே காங்கிரஸ் இருந்து வருகிறது. அவர்களுக்கு நாட்டின் நலனில் துளியும் அக்கறையுமில்லை; கவலைப்படுவதுமில்லை" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆளுங்கட்சியான தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த நிலையில், இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது.
Summary
Congress is an opportunistic party that commits betrayal, says BJP Leader Vinoj P Selvam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










