வரும் 11-ஆம் தேதி தில்லியில் அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்கும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளாா்.
முதல்வரான பிறகு முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் தில்லி சென்று பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது, கா்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
இந்நிலையில், மாநில முன்னேற்றத்துக்குத் தேவையான வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் தில்லியில் வரும் 11-ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வா் ஜோசப் விஜய் தில்லி செல்ல உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









