திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நோயாளிகளுக்கு இனி பிரத்யேக ஊசி! மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

ரத்தம் மூலம் பரவும் தொற்றுகளைத் தடுக்க மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

News image

பட்ம்: DIPR

Updated On :4 ஜூன் 2026, 5:24 am IST

ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற ரத்தம் மூலம் பரவும் தொற்றுகளைத் தடுக்க அனைத்து மருத்துவமனைகளும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிறகு தன்னிச்சையாக செயலிழக்கும் ஊசி மற்றும் சிரஞ்சுகளை (ஆட்டோ டிஸேபிள் சிரஞ்ச்) உபயோகப்படுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவதால் ஹெச்ஐவி போன்ற ரத்த வழியே கடத்தப்படும் தொற்றுகள் வேகமாகப் பரவுவது அண்மைக்கால தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முறையான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும்.

அதன்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூய்மையான ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஊசிகளை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடாது.

அதேபோல, பயன்படுத்தப்பட்ட கூா்மையான மருத்துவக் கழிவுகளை உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையாகப் பிரித்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஊசி மறுபயன்பாட்டை தானாகவே தடுக்கும் ‘ஆட்டோ-டிஸேபிள்’ சிரிஞ்சுகளை மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாகத் தங்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு இது குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.

ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவது, போதிய முன்னெச்சரிக்கை இன்றி செயல்படுவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.