ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்கேதாட்டு அணை தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வழக்கு! பேரவைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!

மேக்கேதாட்டு அணை தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வழக்கு பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :30 ஜூலை 2026, 12:11 pm IST

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க பேரவைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேக்கேதாட்டு குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் சேர்க்கப்பட்டது.

இதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இந்த நிலையில், இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஏக மனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இரண்டு வாரங்களில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

Summary

AIADMK files case against the Mekedatu dam resolution; Assembly Secretary ordered to respond.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.