ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூர் அரசுப் பணி ரத்து! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது...

Government jobs granted to families of Karur victims revoked

பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணி வழங்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் / உச்சநீதிமன்றம் - எக்ஸ்

Published On :30 ஜூலை 2026, 4:19 am IST

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அதில், அரசுப் பணி ஆணை வழங்கியது அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்ட நடவடிக்கை என்றும், அதில் நீதிமன்றம் குறுக்கிட முகாந்திரமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரசார பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு "குரூப் 4' நிலை அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்.

இதற்கு எதிரான வழக்கை ஜூலை 27-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அடங்கிய அமர்வு, அரசுப் பணிகளை அரசின் கொடையாகவோ அல்லது ஒரு துயரச் சம்பவத்துக்குப் பிந்தைய கருணை நிவாரணமாகவோ வழங்க முடியாது என்று தீர்ப்பளித்து பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது.

Summary

Tamil Nadu government has filed an appeal in the Supreme Court challenging the cancellation of the government jobs granted to the families of those who died in the Karur stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.