ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Which cases are up for hearing at the Madras High Court today (July 27)?

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :27 ஜூலை 2026, 8:58 am IST

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் வழக்குகள்:

1. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளை தொடர்பான விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

2. 2,708 உதவிப் பேராசியர் பணியிடங்களுக்குத் தேர்வெழுதிய 42, 064 தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீட்டின் வெளிப்படைத்தன்மையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரி ' வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் கரு. நாகராஜன் தாக்கல் செய்த பொதுநல வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

3. விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பிணை கோரிய வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.

4. மேலும் குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் பிணை கோரிய வழக்குகளும் விசாரணைக்கு விசாரணைக்கு வருகின்றன.

Summary

Several key cases, including the election petition filed against former Chief Minister M.K. Stalin regarding the Kolathur constituency, are coming up for hearing at the Madras High Court today (Monday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.