ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம்.

Published On :22 ஜூலை 2026, 9:26 am IST

முன்னாள்கள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கே.ஆர். பெரியகருப்பன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வருகின்றன.

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா, குழந்தைகளைப் பிரசாரத்தில் பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் விசாரணை செய்யப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், அதிமுகவின் லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோருக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் இன்று விசாரணை செய்யப்படுகின்றன.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ். ரகுபதி ஆகியோரது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகளும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளன.

Summary

Cases challenging the election victories of former ministers C. Vijayabaskar, K.R. Periakaruppan, and C.V. Shanmugam, among others, are coming up for hearing at the Madras High Court today (July 22).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.