ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார் உதயநிதி!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை உதயநிதி நேரில் சந்தித்தது பற்றி...

Udhayanidhi meets dmk mla markandeyan in palayamkottai jail

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுடன் உதயநிதி - கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 1:38 pm IST

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்தார்.

திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். மார்க்கண்டேயனுக்கு உதயநிதி ஆறுதல் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மார்க்கண்டேயனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Udhayanidhi meets dmk mla markandeyan in palayamkottai jail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.