ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருப்பது பற்றி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :27 ஜூலை 2026, 2:21 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) மாலை காணொலி வாயிலாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில் புதிய அரசின் முதல் பட்ஜெட்டான 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வருகிற ஆக. 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விஜய் துறைரீதியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

திமுக சட்டமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் தவறாது  கலந்துகொள்ளமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Summary

DMK MLAs meeting tomorrow (July 28) under the leadership of Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.