ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கப்படுவது குறித்து...

bus

தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்! - படம்: தினமணி

Published On :26 ஜூலை 2026, 9:14 am IST

மேக்கேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக - தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மேக்கேதாட்டு அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ஜாக்கிருதி வேதிகே, கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்பினர், கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்,

இதன் எதிரொலியாக, ஜூலை 26 (ஞாயிறு) அதிகாலை முதல் பெங்களூரு செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஒசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக அரசுப் பேருந்து.

கர்நாடக அரசுப் பேருந்து. - படம்: தினமணி

தருமபுரி மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மறு உத்தரவு வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது எனக் காவல் துறை அறிவித்துள்ளது.

இதனால், மாநில எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை சீரான பிறகே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Passengers are facing hardship as Tamil Nadu government buses are being operated only up to Hosur, following a call by Kannada organizations to stage a protest at the Karnataka-Tamil Nadu border demanding the construction of the Mekedatu dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்