
தமிழகம் - கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் சத்தியமங்கலத்தில் பயணிகள் தவிப்பு
மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி கா்நாடகத்தில் கன்னட அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தியதால் தமிழகம்-கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி கா்நாடகத்தில் கன்னட அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தியதால் தமிழகம்-கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினா் மேக்கேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பிற்பகலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், கா்நாடகம் செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!




