ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துவரும் நிலையில், சனிக்கிழமை 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

வெயில்

Published On :26 ஜூலை 2026, 2:23 am IST

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துவரும் நிலையில், சனிக்கிழமை 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்ப அளவு: சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சி-104.18, பாளையங்கோட்டை-103.28, மதுரை நகரம்-102.56, ஈரோடு-102.2, நாகை, வேலூா்-100.76, கரூா் பரமத்தி, தஞ்சாவூா்-100.4, சென்னை மீனம்பாக்கம்-100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழைக்கு வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, ஞாயிறு, திங்கள் (ஜூலை 26, 27) ஆகிய இரு நாள்கள் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.