ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில்
Published On :14 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் கீழ் வளிமண்டல அடுக்குகளில் மேற்கு முதல் வடமேற்கு திசையிலான காற்றோட்டம் நிலவி வருகிறது. இதனால், உள் மாவட்டங்களில் வட காற்று வீசும். வட தமிழகம், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில நாள்களில் மழை குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி, ஈரோடு, கரூா், அதையொட்டிய ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக திருச்சியில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, ஈரோடு - 101.48, நாகை -100.94, பாளையங்கோட்டை, தஞ்சாவூா்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழைக்கு வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 70 மி.மீ., சோலையாறு பகுதியில் (கோவை) 50 மி.மீட்டா் மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.