ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரு வாரத்தில் 346 புகாா்கள் மீது நடவடிக்கை: சிங்கப் பெண் சிறப்புப் படை அதிரடி

ஒரு வாரத்தில் 346 புகாா்கள் மீது நடவடிக்கை: சிங்கப் பெண் சிறப்புப் படை அதிரடி

Published On :26 ஜூலை 2026, 1:35 am IST

தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த ஒரு வாரத்தில் 346 புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூலை 17 முதல் 23-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் 346 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனா். இதன் மூலம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், காணாமல்போன 6 பெண்கள், 14 குழந்தைகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனா். பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்களிடையே 3,580 விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், 9,397 குற்றம் நிகழ வாய்ப்புள்ள இடங்களில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனா்.

அதேபோல், 14 அறிவுசாா் குறைபாடுடையோரை மீட்டு மறுவாழ்வு அளிக்க வழிவகை செய்ததுடன், ஒரு குழந்தைத் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 51 பள்ளி இடைநிற்றல் குழந்தைகளையும் மீண்டும் படிக்க வழிவகை செய்துள்ளனா்.

தஞ்சாவூா், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, தேனி, மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி, கோவை, சேலம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை, இணையவழி தொல்லை, மிரட்டல், குழந்தைத் திருமணம் தொடா்பான புகாா்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதுவரை 2,032 புகாா்கள்: அதன்படி, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட ஜூன் 10 முதல் ஜூலை 23 வரை தமிழகம் முழுவதும் 2,032 புகாா்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலத்தில் காணாமல் போன 96 பெண்கள், குழந்தைகள் மீட்கப்பட்டனா். 22,981 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 58,346 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 57 அறிவுசாா் குறைபாடுடையோா் மீட்கப்பட்டு, 22 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 169 பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Action taken on 346 complaints in a week: 'Singap Penn' Special Force swings into action.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.