ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

7 நாள்களில் 255 புகாா்கள் மீது நடவடிக்கை: சிங்கப் பெண் சிறப்புப்படை அதிரடி

தமிழகத்தில் 7 நாள்களில் 255 புகாா்கள் மீது சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

சிங்கப்பெண் அதிரடிப் படை

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

தமிழகத்தில் 7 நாள்களில் 255 புகாா்கள் மீது சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு வழங்குதல், குற்றங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை இந்தப் படை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,115 இடங்களை இந்த அதிரடிப்படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 7 நாள்களில் இந்த அதிரடிப்படையினா் 255 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 11 போ் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு பள்ளியை விட்டு இடைநின்ற 40 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,537 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.