ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வரும் அமைச்சர்களும் இன்று விடுப்பில் உள்ளதால்...! கனிமொழி காட்டம்

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணமடைந்தது பற்றி...

kanimozhi MP asks question on thoothukudi youth death in police custory

கனிமொழி எம்.பி., - கோப்புப் படம்

Published On :23 ஜூலை 2026, 3:36 pm IST

முதல்வரும் அமைச்சர்களும் இன்று விடுப்பில் உள்ளதால் இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய்யின் ரசிகர்களும் தொண்டர்களும் 'ஜன நாயகன்' பட வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர்.

தவெக அமைச்சர்களும் இன்று திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தலை மற்றும் உடலில் காயம் இருப்பதால் போலீசார் தாக்கியதால் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி, உடலைப் பெற மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!

நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

kanimozhi MP asks question on thoothukudi youth death in police custory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.