
தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூய பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் - கோப்புப் படம்
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆலய பெருவிழா தொடங்குகிறது.
விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாளான ஆக. 5 அன்று பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வருவதால் அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
ஆக. 5 -க்குப் பதிலாக விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 8 ஆம் தேதி சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக. 5 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் தொடர்புடைய மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Summary
Aug. 5 is Local holiday for Thoothukudi district
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






