ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது ராகுலைக் கிண்டல் செய்யும்விதமாக பேசியது பற்றி...

I am not speaking of a 56-year-old youth: PM Modi takes dig at Rahul Gandhi

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது... - X

Published On :20 ஜூலை 2026, 3:31 pm IST

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது இந்தியாவின் இளைஞர்களைப் பாராட்டியபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்குவதையடுத்து அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, இந்தியாவில் இளைஞர்கள் பல துறைகளில் பல சாதனைகளைச் செய்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

அவர் பேசும்போது "விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். இந்திய இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 'ஸ்கைரூட்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றும் அந்த குழுவினரின் சராசரி வயது 28 என்று என்னிடம் சொன்னார்கள். நாட்டின் விண்வெளி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான் இந்த பெரும் சாதனையைப் படைத்துள்ளனர். நான் அந்த 56 வயது இளைஞர் ஒருவரைப் பற்றி குறிப்பிடவில்லை" என்று கூறினார்.

56 வயது இளைஞர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டு மோடி அவ்வாறு பேசியுள்ளார்.

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் விவாதங்கள் சூடுபிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

I am not speaking of a 56-year-old youth: PM Modi takes dig at Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.