
பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை!
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரம்....

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் - DPS
பழனி கோயிழுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், விதிமுறைகளை மீறி அறக்கட்டளை நிா்வாகம் ரூ.100 கோடிக்கு விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கான பத்திரப்பதிவும் நடந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி -க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் 3 ஆவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமின் வழங்கியது.
தொடர்ந்து இன்று காலை முதலே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனிடமும் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, பத்திரப் பதிவில் சாட்சி கையொப்பமிட்ட அறக்கட்டளை நிர்வாகி நெல்லையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்கின்றனர்.
ஜஸ்டின் மணிகண்டனின் நண்பரும் பத்திர எழுத்தருமான ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Summary
Palani Temple Land Fraud: Raids on Homes of Sub-Registrar and Document Writer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








