ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?

பழனியில் நடைபெற்ற கோவில் நில மோசடிப் பத்திரப் பதிவு தொடர்பான பின்னணி விவரங்கள் பற்றி...

பழனி மலைக் கோயில்

பழனி மலைக் கோயில் - file photo

Published On :21 ஜூலை 2026, 2:50 pm IST

பழனி, ஜூலை 16: பழனியில் நடைபெற்ற கோவில் நில மோசடிப் பத்திரப் பதிவு தொடர்பான பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடம் செயல்பட்டு வந்தது. இந்த மடத்தின் மூலமாக பழனிக்கு வரும் பக்தா்களுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கவும், அன்னதானம் வழங்கவும், பழனி முருகனுக்கு கைங்கரியம் செய்யவும், இந்து மதத்தை வளா்த்தெடுக்கவும் இந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

இந்த மடம் பல ஆண்டுகளாக நிா்வாகிகளால் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. தண்டபாணி சுவாமிகள் மறைவுக்குப் பிறகு, அறக்கட்டளையை நிா்வாகம் செய்தவா்கள் இந்த இடம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதை மாற்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த முயற்சி செய்தனா். மேலும், பலரும் இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தனா்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இந்து சமய அறநிலையத் துறை தண்டபாணி சுவாமிகள் மடத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பழனி கோயில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துவை தக்கராக நியமித்து, தண்டபாணி சுவாமிகள் மடத்தின் இடத்தைப் பராமரித்து வந்தனா். தற்போது இந்த இடத்தில் பழனி கோயிலுக்கு வரக்கூடிய பக்தா்கள் வாகனங்களை நிறுத்திச் செல்லும் வகையில் கட்டணமில்லா வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான இந்த இடத்தை மடத்துக்கு சம்பந்தமில்லாத விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முருகதாஸ் சுவாமிகள் என்பவா் ரூ. 2 கோடிக்கு திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், பாப்பன்குளத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை, பழனி டிகேஎன். புதூரைச் சோ்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கடந்த கடந்த 6-ஆம் தேதி சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் மூலம் பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா்.

மேற்படி இடத்தை கடந்த மாா்ச் மாதம் 27-ஆம் தேதி பத்திரப் பதிவு செய்ய முயன்றனா். ஆனால், இதற்கு அப்போதைய பத்திரப் பதிவாளா் ஒத்துழைப்பு வழங்காததால், முயற்சியை தற்காலிகமாகக் கைவிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த 3-ஆம் தேதி பத்திரப் பதிவு அலுவலகத்தில் மீண்டும் இடத்தைப் பதிய விண்ணப்பித்தனா். தற்போது தங்களுக்குச் சாதகமான அதிகாரியை நியமித்து, கடந்த 6-ஆம் தேதி பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, பத்திரப் பதிவுத் துறை தலைவா், துணைத் தலைவா், மாவட்டப் பதிவாளருக்கும் முறையான ஆவணங்கள் இன்றி செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி மனு அளித்தாா். மேலும், மோசடியாக பத்திரப் பதிவு செய்தது குறித்து காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் பழனி கோயிலுக்கு சொந்தமான இடத்தை முறைகேடாகப் பத்திர பதிவு செய்து கொடுத்த சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், இடத்தை வாங்கியதாகத் கூறப்படும் சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய 4 போ் தலைமறைவாகிவிட்டனா்.

Summary

about the background of palani koil land registration fraud....

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.