ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பக்தர்கள் கவனத்திற்கு.... பழனி ரோப் கார் சேவை 45 நாட்கள் இயங்காது!

பழனி கோயில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Palani rope car service will not operate for 45 days

ரோப் கார் - கோப்புப்படம்.

Published On :17 ஜூலை 2026, 8:25 pm IST

வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோயில் ரோப் கார் சேவை வருகிற 20ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட (ரோப்காா்) ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை ஒரு மாதம் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இயங்காது.

இதனால் பக்தர்கள் மாற்று வழிகளாக படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Summary

It has been announced that due to annual maintenance work, the Palani temple rope car service will not operate for 45 days starting from the upcoming 20th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.