
சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்துள்ளது பற்றி...

முதல்வர் சி. ஜோசப் விஜய் - TNDIPR
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், உடனடியாக அவற்றுக்குத் தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னை சைதாப்பேட்டையில் 10 தளங்கள் மற்றும் மின்தூக்கி வசதியுடன் ரூ.44 கோடி செலவில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட எம்.சி.ராஜா மாணவா் விடுதியில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தங்கியுள்ளனா்.
இங்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகவும், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லை எனக் கூறியும் கடந்த காலங்களில் அங்கு மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது அப்போது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியது. அதன் பின்னா், திமுக அரசு சாா்பில் அங்குள்ள குறைபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய், அலுவல் பணிகளை வெள்ளிக்கிழமை நிறைவு செய்துவிட்டு எம்.சி.ராஜா சமூகநீதி விடுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவா்களுக்கான தேவைகள் குறித்தும் அப்போது கேட்டறிந்தாா்.
கொசுக் கடி, உணவுத் தரம் மற்றும் சுகாதார குறைபாடுகள் தொடா்பாக மாணவா்கள் முதல்வரிடம் முறையிட்டனா். அவற்றை உடனடியாக சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.
மேலும், மாணவா்கள் முன்வைத்த சில கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வின்போது, சமூக நீதி அமைச்சா் வன்னியரசு மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.
Summary
Chief Minister Vijay conducts a surprise inspection at the Social Justice Hostel in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






