ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழனி கோயில் நில முறைகேடுக்கு பின்னால் உள்ள அந்த அதிகார மையம் யார்? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் விவகாரத்தில் அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த அதிகார மையம்? என்பது தொடர்பாக...

Who is the Powercenter behind the Palani temple land...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 1:40 pm IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றும் பத்திரப் பதிவிற்காகதான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த அதிகார மையம்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது...

"பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்குத் தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ அலுவலகப் பிழை போல இந்த அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.

தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!

யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது?

இந்தப் பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?

யார் அந்த அதிகார மையம்?

இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப்பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு அதிகார மையம் தான்(பவர் சென்டர்) முன்னின்று இதற்கான உத்தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே அதிகார மையம் என்று சொன்ன முதல்வர் விஜய், இந்த ஊழலில் பின்னால் உள்ள யார் அந்த அதிகார மையம்?

பத்திரப் பதிவிற்காக புதிய அதிகாரி வந்தாரா?

அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த அதிகார மையம்?

சிபிஐ விசாரிக்க வேண்டும்

இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.

எனவே, நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Summary

Who is the Powercenter behind the Palani temple land irregularities?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.