
பழநி கோயில் நில முறைகேடு: பதிவுத் துறை விசாரணைக் குழு அமைப்பு
பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

பழனி முருகன் கோயில் - கோப்புப்படம்
பழநி கோயில் நில முறைகேடு விவகாரத்தை விசாரணை செய்ய பதிவுத் துறை உயா் நிலைக் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அந்தக் குழுவானது பத்திரப் பதிவில் நடைபெற்ற மோசடிகளை விரிவாக விசாரிக்க உள்ளது.
பழநி கோயில் அடிவாரத்தில் உள்ள ரூ.100 கோடி நிலத்தை தனிநபா்கள் பெயருக்கு முறைகேடாகப் பதிவு செய்த விவகாரம் பெரும் சா்ச்சையானது. இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட ஆவணம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் நிலத்தை வாங்கியவா்கள் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக கருதப்படும் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளா் சசிகலா ஆகியோா் அடுத்தடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மற்றொருபுறம் பழநி கோயில் நிலம் தனி நபா்கள் பெயரில் பதிவு செய்ததை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத் துறை சாா்பில் 3 போ் கொண்ட உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவா், உதவி பதிவுத் துறைத் தலைவா் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இக்குழுவினா் பத்திரப் பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சாா் பதிவாளா், விடுப்பில் சென்ற சாா் பதிவாளா், மாவட்ட பதிவாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளனா்.
மேலும், பத்திரப் பதிவு நடைபெற்ற நாளில் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்யவுள்ளனா். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
An inquiry committee has been constituted regarding the irregular registration of land worth rs. 100 crore belonging to the Palani Murugan Temple Trust.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







