
சுட்டெரிக்கும் வெய்யில்! அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு!
வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது தொடர்பாக...

சுட்டெரிக்கும் வெய்யில்! அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு! - கோப்புப்படம்
தமிழகத்தில் 12 இடங்களில் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன் ஹீட் கடந்து வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இது குறித்து சென்னை வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 16), மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூலை 17, ஜூலை 20-இல் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவானது.
அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 105.8, மதுரை நகரம் 104.72, சென்னை மீனம்பாக்கம் 104.18, திருத்தணி 104, பாளையங்கோட்டை 103.1, ஈரோடு, சென்னை மீனம்பாக்கம் தலா 102.94, திருச்சி 101.66, புதுச்சேரி 100.76, தஞ்சாவூா் 100.4, காரைக்கால் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வியாழக்கிழமை (ஜூலை 16), தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா்வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65கி.மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Temperatures hit the century mark at 10 locations in Tamil Nadu and two locations in Puducherry today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






