ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து...

accident

கோப்பிலிருந்து... - படம்: தினமணி

Published On :14 ஜூலை 2026, 9:58 am IST

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பாத்தபாளையம் தொழிற்சாலையில், ராட்சத பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி, வடமாநில தொழிலாளி ரவி ரஞ்சன்(24) பலியானார்.

அதிக அழுத்தம் காரணமாக, பாய்லரின் தலைப்பகுதி தூக்கிவீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்த தொழிலாளர்கள் 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Summary

One person was killed and four others were critically injured in a fire caused by a boiler explosion at an iron and steel plant near Gummidipoondi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.