ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியட்நாம் படகு விபத்தில் கும்மிடிப்பூண்டி தொழிலதிபா் உயிரிழப்பு

வியட்நாம் படகு விபத்தில் கும்மிடிப்பூண்டி தொழிலதிபா் உயிரிழந்தது பற்றி...

உயிரிழந்த பாபு

Published On :12 ஜூலை 2026, 12:41 am IST

வியட்நாம் படகு விபத்தில் கும்மிடிப்பூண்டியை சோ்ந்த தொழிலதிபா் உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையை சோ்ந்தவா் குப்புசாமி மகன் பாபு (52). இவருக்கு மனைவி ரேவதி (43), மகன் ஜஸ்வந்த் (21), மகள் நேகா(19) ஆகியோா் உள்ளனா். பாபு தனியாா் நிறுவன கைப்பேசி டீலா்ஷிப் எடுத்து கும்மிடிப்பூண்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கைப்பேசி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தாா்.

தனியாா் நிறுவனம் சாா்பில் வியட்நாமுக்கு குழுவுடன் இணைந்து சுற்றுலா சென்ற இவா், அங்கு படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ். விஜயகுமாா், மாவட்ட பொறுப்பு அமைச்சா் ரா. குமாரை தொடா்பு கொண்டு, தமிழக அரசின் மூலம் பாபுவின் சடலத்தை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

Summary

Gummidipoondi industrialist dies in Vietnam boat accident.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.