உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்தேனா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ரமேஷ் அளித்துள்ள விளக்கம் குறித்து...

அமைச்சர் ரமேஷ் - எக்ஸ்
இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? என நயினார் நாகேந்திரனுக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''உறவினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தவெக அரசுமீது ஊழல் கறையை சுமத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். உறவினர்களுக்கு கொடுத்துவிட்டேன் என பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்.
உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்ததாக செய்தி வெளியிட்டவர்கள், அவதூறு பரப்பிய தனிநபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய புகார் அளித்துள்ளோம். கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது.'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Did I register temple land in the names of relatives Minister Ramesh clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





