ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர் பூமணி: கனிமொழி

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு திமுக எம்பியும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி இரங்கல்.....

Poomani influenced even the new generation of writers: Kanimozhi

பூமணி - கனிமொழி

Published On :13 ஜூலை 2026, 11:41 am IST

புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர் பூமணி என்று திமுக எம்பியும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நவீனத் தமிழிலக்கிய ஆளுமை கரிசல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவருமான எழுத்தாளர் பூமணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

கரிசல் நிலப் பகுதி மக்களின் வாழ்வியலை, மொழியை, பண்பாட்டை மையமாகக் கொண்ட கலைப்படைப்புகள் அவருடையவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கிய வெளியில் பயணித்து வரும் அவர், தமிழின் யதார்த்தவாத புனைவெழுத்தின் முன்னோடியாக புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர்.

அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பூமணி காலமானார். ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் காலமானார்.

Summary

DMK MP and the party's Deputy General Secretary Kanimozhi stated that Poomani was someone who influenced even the new generation of writers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.