ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கோப்புப்படம்.

Published On :14 ஜூலை 2026, 1:09 am IST

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பான அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அதன்படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயா், இடமாற்றம் செய்யப்பட்ட பதவி, பழைய பதவி (அடைப்புக்குறிக்குள்) விவரம்:

  • எச்.கிருஷ்ணனுண்ணி - கால்நடை பராமரிப்பு  மற்றும் கால்நடை மருத்துவத் துறை இயக்குநா் (தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்),

  • ஷில்பா பிரபாகா் சதீஷ் - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் (தொழிலாளா் நலத்துறை ஆணையா்),

  • எஸ்.பி.அம்ரித் - தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு  மற்றும் கால்நடை மருத்துவத் துறை இயக்குநா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.