ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

“அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்!

அண்ணாமலை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தது பற்றி...

Annamalai, Thirumavalavan

அண்ணாமலை, திருமாவளவன் - படம் - தினமணி

Published On :12 ஜூலை 2026, 2:26 pm IST

முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும் ’வீ த லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) தலைவருமான அண்ணாமலை குறித்து விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.

விசிக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது:

தமிழ்நாட்டு அரசியலில் தவெகவுக்கு எதிர்நிலையில் இருக்கப்போவது பாஜகவாக இருந்து விடக் கூடாது அல்லது அண்ணாமலையாக மாறிவிடக் கூடாது. அப்படியென்றால், அண்ணாமலையைக் கண்டு திருமாவளவன் பயப்படுகிறாரா? என்றால், அண்ணாமலையாக வந்தால் பிரச்னை இல்லை. ஆர்எஸ்எஸ் முகத்தோடு முகமூடி போட்டுக்கொண்டு வந்தால் அது பிரச்னைதான்.

ஏனென்றால், அவர் ஆர்எஸ்எஸ்-ல் பயிற்சி பெற்றவர். அந்தப் பாசறையில் வளர்ந்தவர். அவரால் எப்படி அதைத் தாண்டி பெரியார் அரசியலையோ அல்லது இடதுசாரி அரசியலையோ பேச முடியும்? அவர் எப்படி தவெகவுக்கு எதிர்நிலை சக்தியாக வளர முடியும்? அப்படி அவர் வளர்ந்தால் தில்லியில் கேஜரிவாலுக்கு நிகழ்ந்த நிலைதான் உருவாகும் அல்லது மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு நிக்ழ்ந்த நிலைதான் வரும்.

இதுபோன்ற ஓர் அரசியல் சூழல் உருவாகிவிடும் என்பதால்தான் நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட நினைத்தேன். ஆனால், மு.க. ஸ்டாலின் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று மட்டும்தான் சொன்னார்.

உடனடியாக என்னுடைய ஆசையை பின்னுக்கு தள்ளி கூட்டணித் தலைவரின் உள்ளம் நோகக் கூடாது என்ற அடிப்படையில் காட்டுமன்னார்கோவிலில் நிற்கக் கூடாது என்ற முடிவெடுத்தேன். ஆனால், இன்றைக்கு விடுதலை சிறுத்தைகளை திமுகவுக்கு எதிராகவும், தவெகவுக்கு எதிராகவும் நிறுத்தப் பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

VCK leader Thirumavalavan has spoken about former BJP state president and 'We the Leaders' (Idhu Namma Iyakkam) leader Annamalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.