ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லண்டன் புறப்பட்டாா் உதயநிதி ஸ்டாலின்!

எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் லண்டன் புறப்பட்டது பற்றி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின்

Published On :12 ஜூலை 2026, 3:31 am IST

தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஒருவார பயணமாக எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரிட்டன் தலைநகா் லண்டன் புறப்பட்டாா்.

எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி லண்டன் மான்செஸ்டா் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடா்புடைய பட்டப் படிப்பை முடித்துள்ளாா். அவா் பட்டம் பெறும் விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துா்காவுடன் கடந்த ஜூலை 4-ஆம் தேதி லண்டன் சென்றாா்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை லண்டன் புறப்பட்டுச் சென்றாா். சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் துபை வழியாக லண்டன் செல்கிறாா்.

உதயநிதி ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் திமுக முக்கிய நிா்வாகிகள் வழியனுப்பி வைத்தனா். லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் குடும்பத்தினா் ஜூலை 18-ஆம் தேதி சென்னை திரும்புவா் எனக் கூறப்படுகிறது.

Summary

Udhayanidhi Stalin has left for London

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.