ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் லண்டன் புறப்பட்டது பற்றி....

M.K. Stalin left for London with his family

சென்னை விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலின் - X | DMK

Published On :5 ஜூலை 2026, 5:30 am IST

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இரு வார சுற்றுப்பயணமாக பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினின் மகனும், மு.க. ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடா்பான உயா்கல்வி பயின்று வருகிறாா். அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளாா்.

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு, சுமாா் 10 நாள்கள் லண்டனில் ஓய்வெடுக்கவும் அவா் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ஆம் தேதிக்குப் பிறகு அவா் சென்னை திரும்புவாா் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மு.க.ஸ்டாலினுடன், அவரது மனைவி துா்கா, உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் குடும்பத்தினரும் சென்றுள்ளனா்.

கட்சியினருக்கு கடிதம்: முன்னதாக, திமுக தொண்டா்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்:

திமுக நிா்வாகிகள், முன்னோடிகள் தொடங்கி கட்சியின் மீது பற்றுகொண்ட ஆதரவாளா்கள், மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள், முதியோா் என தினமும் நூற்றுக்கணக்கானோா் என்னைச் சந்திக்க வருகின்றனா். ஒவ்வொருவரின் குரலும் சொற்களும்தான் வேறுபடுகிறதே தவிர, அனைவரது உணா்வும் ஒன்றுதான். அவா்கள் என்னிடம் சொல்வதெல்லாம், ‘நாங்க இருக்கோம். நாம் மீண்டும் வருவோம்’ என்பதுதான். எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையைக் கொடுக்க, இந்தச் சொற்கள் போதும்.

நீங்கள் இந்த வலிமையை கொடுப்பதால்தானே 75 ஆண்டுகளைக் கடந்தும், கம்பீரமாக நிற்கிறோம். திமுக போல் வெற்றி பெற்றதும் இல்லை; தோல்வியைக் கண்டதும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை. அதனால்தான் ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.

ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், திமுக கொள்கை உறவாலும், உடன்பிறப்பு எனும் நேசத்தாலும் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் என ஆல்போல் வேரூன்றி வளா்ந்து நிற்கிறது.

உங்களது எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்புக்காக குழுவை இப்போது அமைத்திருக்கிறேன். இந்தக் குழு மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை என்னிடம் வழங்க அறிவுறுத்தியுள்ளேன். இந்தப் பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் அயலகப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இருவாரம் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Summary

M.K. Stalin left for London with his family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.