
திருப்பூர்: ஊத்துக்குளி அருகே கார் டேங்கர் லாரி மோதி 6 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் காரும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்தில் உருக்குலைந்த கார்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே காரும், டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சேலம், சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமா (33). இவரது கணவா் முகிலன்(35), குழந்தைகள் ஸ்ரீநித்து (3), கனிஷ் (9 மாதங்கள்), ஹேமாவின் தந்தை ஈஸ்வரன் (55), தாய் திருமகள் (50), பாட்டி சிவகாமி (65) ஆகியோா் திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளனா்.

துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவா்கள் மீண்டும் பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்துக்கு காரில் வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்களது காா் ஊத்துக்குளி அருகே காக்காபள்ளம் பகுதியில் வந்தபோது, விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி வந்த டீசல் டேங்கா் லாரியும் காரும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காா் அப்பளம்போல நொறுங்கியது.
விபத்தில் காரில் பயணித்த முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். மேலும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமா மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா் அவா் உயா் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஊத்துக்குளி போலீஸாா், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
Summary
Six people tragically lost their lives in a collision between a car and a lorry in Uthukuli, Tiruppur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






