ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) விசாரிக்கப்படும் வழக்குகள் பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :9 ஜூலை 2026, 11:32 am IST

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 9) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடந்த விசாரணையில் எ.வ. வேலு ஆஜராகாததால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் தவெக அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், அவர் புதிதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதேபோல மனோஜ்பாண்டியன், ஓ. பன்னீர்செல்வம், ஜோ சார்லஸ் மார்டின் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Summary

Which cases are scheduled for hearing at the Madras High Court today July 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.