ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! என்ன செய்யப் போகிறார் மேயர் பிரியா?

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

chennai corporation tender

முதல்வர் ஜோசப் விஜய், மேயர் பிரியா - கோப்புப்படம்

Published On :8 ஜூலை 2026, 11:20 am IST

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு சென்னை மாநகராட்சியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செலவீனங்களை முறைப்படுத்தும் பணிகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வருவாயைப் பெருக்கவும், சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவற்றை முழுமையாக வசூலிக்க சிறப்பு முகாம்களும் வார்டு வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் விடப்பட்ட வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உள்பட ரூ. 700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சியின் நிதிச்சுமை சீரடைந்த பிறகு, மறுஆய்வு செய்யப்பட்டு, அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்கள் முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை முன்கூட்டியே தீர்மானித்தது, திட்டச் செலவு செயற்கையாக அதிகரித்தது போன்ற முறைகேடுகள் காரணமாக டெண்டர்களை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத் துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்து வருவதால், மேயர் ஆர். பிரியா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Summary

Chennai Corporation's ₹700 crore tenders cancelled! What will Mayor Priya do?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.