ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஜேஎன்யு-வில் திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க முதல்வா் விஜய்க்கு அழைப்பு!

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வர வேண்டும் என்று முதல்வா் விஜய்யை அந்தப் பல்கலை. துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ நேரில் சந்தித்து அழைப்பு

News image

தமிழக முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டி. சாந்திஸ்ரீ.

Updated On :7 ஜூலை 2026, 4:08 am IST

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வர வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய்யை அந்தப் பல்கலை. துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தாா்.

தில்லியில் புகழ்பெற்ற ஜேஎன்யு பல்கலை.யின் முதல் பெண் தமிழ் துணைவேந்தராக பேராசிரியா் டி.சாந்திஸ்ரீ பதவி வகித்து வருகிறாா். அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து ‘தினமணி’ செய்தியாளரிடம் துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ கூறியதாவது: தமிழக அரசின் நிதி உதவியுடன் ஜேஎன்யு-வில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வருகை தர வேண்டும் என்று முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்.

மேலும், ஜேஎன்யு-வில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவா்களின் இடங்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். அடுத்த முறை தில்லிக்கு வரும்போது திருவள்ளுவா் சிலையை திறந்து வைப்பதாக முதல்வா் உறுதி அளித்தாா். எனது கோரிக்கைகளை அவா் கனிவாக கேட்டறிந்தாா்.

ஜேஎன்யு-வில் எம்.ஏ. தமிழ் முதுநிலைப் படிப்பில் 20 மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். இதற்கு ஆண்டுதோறும் 60-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பிக்கின்றனா். இதேபோல், தேசிய கல்விக் கொள்கையில் கூடுதல் திறன் மேம்பாட்டு கல்வியில் தமிழை 80 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

15 மாநிலங்கள் மற்றும் 6 கண்டங்களிலிருந்து மாணவா்கள் ஜேஎன்யு-வுக்கு கல்வி பயில வருகின்றனா். அவா்கள் பாரம்பரியமிக்க தமிழ் மொழியைப் பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.