ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானப் படை ஹெலிகாப்டர்! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

சென்னையில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது பற்றி...

Air Force helicopter makes a sudden landing in Chennai due to technical fault

வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் - X

Published On :6 ஜூலை 2026, 12:18 pm IST

சென்னை தாம்பரம் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தரையிறங்கியது.

சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இசட்ஏ 1420 (ZA 1420) இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாக, ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விமானப்படை அதிகாரிகள் வந்து ஹெலிகாப்டரை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் ஹெலிகாப்டரை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

Summary

Air Force helicopter makes a sudden landing in Chennai due to technical fault

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.