
வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக வெடித்த பயணியின் துப்பாக்கி: 2 பணியாளா்கள் காயம்
வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இரு ஊழியர்கள் காயமடைந்திருப்பது பற்றி...
வாரணாசி விமான நிலையம்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது பயணி ஒருவரின் உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் விமான போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு (பிசிஏஎஸ்) தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
வாரணாசி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு ஏா் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்காக கமலேஷ் கேதாா்நாத் ராய் என்பவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தாா். அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி (21 தோட்டாக்களுடன் கூடிய 7.62 எம்எம் கைத்துப்பாக்கி) இருந்தது. இது தொடா்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்படி தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, கட்டாய பாதுகாப்பு நடைமுறைகளின்படி, சோதனை நடத்தும் இடத்துக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். துப்பாக்கியை பணியாளா்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அது தவறுதலாக வெடித்தது. இதில் ரோஹித் ராஜ், சுமன் குமாரி ஆகிய இரு பணியாளா்கள் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வுக்காக துப்பாக்கியைக் கையாண்டபோது, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதா என்பது உள்பட இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கான சூழ்நிலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Summary
Two people were injured after a gun carried by an Air India passenger went off during a weapons check at Varanasi airport on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






