ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!

தமிழ்நாட்டில் மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ரீடிங் எடுக்க புதிய மொபைல் போன் வாங்க ரூ. 10,000 வழங்கப்படுவது குறித்து...

TANGEDCO announces Rs 10,000 allowance for meter readers

மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு செல்போன்... - பிரதிப் படம்

Published On :5 ஜூலை 2026, 9:40 am IST

தமிழ்நாட்டில் மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ரீடிங் எடுக்க புதிய மொபைல் போன் வாங்க ரூ. 10,000 வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் வீடு, வணிக நிறுவனங்களில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க மொபைல் போன் செயலியைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்களின் பணியை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் ஊழியர்கள் புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ரூ. 10,000 வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்படும்.

இருப்பினும், இந்தத் தொகையானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது என்றும், ஒருமுறை பெற்றுக் கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த வசதியைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

Summary

TANGEDCO announces Rs 10,000 allowance for meter readers to purchase Mobile phones and Sim cards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.