ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி

சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Some people left the DMK as soon as the sofa arrived: Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின்-சீமான்.

Published On :5 ஜூலை 2026, 1:52 pm IST

சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாழ்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். தொடர்ந்து நிகழ்வில் பேசிய உதயநிதி, இன்று சில பேர் சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சென்று விட்டனர். ஆனால் நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியாக வந்துள்ளீர்கள்.

இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் காவல் அரணாக திமுக நிற்கும்.

அரசியல் பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை நிச்சயம் தலைவர் மீட்டெடுப்பார். இவ்வாறு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.