மேக்கேதாட்டு அணை தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கா்நாடக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேக்கேதாட்டு அணையை கா்நாடக அரசு கட்டி விடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணையை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு சற்றும் தொடா்பில்லாத வகையில், புதிய நடுவா் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் சோ்க்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள விவசாயிகள் தயாராக இல்லை. இது கா்நாடகத்துக்கு சாதகமாகவே அமையும். மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்காக கா்நாடக அரசு எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறதோ, அதைவிட பல மடங்கு தமிழக அரசும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
இதுதொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம்; பேரவை தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு பாதிப்பு: அன்புமணி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் அரசியல் ஆதாயம் தேடுகிறாா்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




