ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை மெட்ரோவில் பயணிப்பவரா? இந்த தகவல் தெரியுமா?

சென்னை மெட்ரோவில் பயணிப்பவராக இருந்தால், இந்த தகவல் தெரிந்திருக்க வேண்டுமே..

சென்னை மெட்ரோ - கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 1:55 pm IST

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை இயக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ வழித்தடம் நான்கின் கீழ், பூந்தமல்லி - வடபழனி இடையிலான பகுதியில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள், பயண அனுபவத்தையே முற்றிலும் மாற்றியமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுடிஓ என்படும் அன்அட்டென்டன்ட் டிரெயின் ஆபரேஷன் வகையிலான 15 ரயில்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அதிநவீன சென்சார்களுடன், மத்திய கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்படி, இந்த ரயில்களின் வேகம், இயக்கம் என அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி - வடபழனி இடையே, குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட மெட்ரோ நிலையங்கள் அமைகின்றன. இந்த வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்து சோதனைப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகறிது.

Summary

Do you travel on the Chennai Metro? Do you know this information?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.