ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தது பற்றி...

CM Metro

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு - எக்ஸ்

Published On :30 ஜூலை 2026, 1:02 am IST

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளை மெட்ரோ ரயில் பயணித்து முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் 2-ஆம் கட்டம் மெட்ரோ திட்டப்பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சீல் நடைபெற்றது வருகிறது. இச்சூழலில் அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ நிலையத்துக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் செலுத்தி முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸ் கட்டடத்திலுள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் பாா்வையிட்டு, மெட்ரோ ரயில்களின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் நிா்வகித்தல் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் - 1, 2 மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், எதிா்கால விரிவாக்கப் பணிகள், அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தின் இறுதி இடத்தினைச் சென்றடைவதுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இதர போக்குவரத்து வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அதையடுத்து, மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரை 5 -ஆவது வழித்தடத்துக்குள்பட்ட கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், 4-ஆவது வழித்தடத்தில் அமைந்துள்ள போரூா் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தை ஆய்வு செய்து, அங்கிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரையும், அங்கிருந்து மீண்டும் போரூா் வரையும் ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சோதனை ஓட்டத்தைப் பாா்வையிட்டதுடன், விரைவில் திறக்கப்படவுள்ள புதிய வழித்தடத்தின் செயல்பாட்டு ஆயத்தப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஹரிஷ், ரேவந்த் சரண், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மு.அ. சித்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Summary

Chief Minister Vijay inspects by traveling on the Chennai Metro train!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.