புதுச்சேரியில் சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆக. 8 புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் நுழைந்து சகோதரர் மற்றும் அவரது மனைவியை தற்போதைய நிதி அமைச்சர் மரிய வில்சன் கட்டையால் தாக்கினார்.
கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மரிய வில்சன் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை.
தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இருப்பதால் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Summary
Attack on his brother at his home: Minister Marie Wilson fails to appear in court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை முயற்சி வழக்கு: மரியவில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!

”தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலை!” அமைச்சர் மரிய வில்சன்! | TVK | TN Budget







